புஷ்பா 2 படத்தில் ஒரே ஒரு நாள் படப்பிடிப்பின் செலவு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


புஷ்பா 2 படத்தின் ஒரே ஒரு நாளுக்கான படப்பிடிப்பு செலவு குறித்த தகவல் ஆச்சர்யப்படும் வகையில் உள்ளது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2022ம்  ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தற்போது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  வில்லனாக நடிக்கும் ஃபகத் ஃபாசிலுக்கான படப்பிடிப்பு  முடிவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகின. கதாநாயகி ராஷ்மிகா நேற்று முதல் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் ஒரே ஒரு நாள் படப்பிடிப்புக்கு ரூ.80 லட்சம் செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் அது ஒரு சண்டைக்காட்சி என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் புஷ்பா பட ரசிகர்கள் மேலும் ஆவலாக இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do you know how much a single day of shooting for Pushpa 2 cost


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->