"கங்குவா" கதை இதுதான்! மனம் திறந்த இயக்குநர் சிறுத்தை சிவா!! - Seithipunal
Seithipunal


அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்துவருகிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வில்லனாக நட்டி நட்ராஜ் நடிக்கிறார். அதிக பொருட்செலவில், மிகவும் வித்யாசமான முயற்சியில் இந்த படம் எடுக்கப்படுவதாக தகவல் வெளியானது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மிகவும் வித்யாசமாகவும் புதிதாகவும் இருக்கும் இந்த கிளிம்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. ஹாலிவுட் படத்தை பார்ப்பது போன்று இருக்கிறது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் பலரும் கங்குவா என்றால் என்ன என்றும் கேள்வி கேட்டிருந்தனர். அதற்கு படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார்.

அதில் "கங்கு என்றால் நெருப்பு, கங்குவா என்பது நெருப்பின் மகன் என்று பொருள் என்று கூறியுள்ளார் சிறுத்தை சிவா. மேலும் இந்த படத்திற்காக சூர்யா தனது 100 சதவித உழைப்பையும் கொடுத்துள்ளார். இது நிஜக் கதை கிடையாது. 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையாக கற்பனையில் உருவாக்கி இருக்கிறேன். அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you know what is Kanguvaa siruthai Shiva reveals


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->