"திருடனும், ரவுடியும் கட்சியில் சேர்ந்தால்.?" 'பரபரப்பு' தான்.! சி.எம்.லோகுவின் புதிய பட அப்டேட்.!
famous directors mahizh thirumeni and vikaraman associate director logu will make his debut in film paraparappu
முன்னாள் அமைச்சர் ஒருவர் வருமானவரித் துறையினருக்கு பயந்து வைத்திருக்கும் 300 கோடி ரூபாயை அரசியல் புரோக்கர் ஒருவர் அவர்களிடமிருந்து காப்பாற்றி பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறுகிறார். அந்த அரசியல் புரோக்கர் பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தாரா? இல்லை திருடினாரா? என்பதை திகிலான திரைக்கதையுடன் சொல்லும் திரைப்படமே பரபரப்பு.
இந்தத் திரைப்படத்தை இயக்குனர்கள் விக்ரமன் மற்றும் மகிழ்திருமேனி ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சி.எம்.லோகு இயக்கியிருக்கிறார். கில்மா கிரி மற்றும் விஜய் விஸ்வா ஆகியோர் கதாநாயகர்களாகவும் நான்சி துபாரா மற்றும் சிம்மு ஆகியோர் கதாநாயகியாகவும் இந்த தளத்தில் நடித்திருக்கின்றனர்.
மேலும், இவர்களுடன் ஆர் சுந்தர்ராஜன் நாஞ்சில் சம்பத் பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கற்பி ப்ரொடக்சன் சார்பாக சி.எம் லோகு, சோகன் லால் மற்றும் கோபிநாயகம் ஆகியோர் இணைந்து தயாரித்த இந்த திரைப்படத்தை சி.எம்.லோகு இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் கலை இயக்குனராக அபி ராஜன் என்பவரும் ஒளிப்பதிவாளராக சங்கர் செல்வராஜ் என்பவரும் பணியாற்றியுள்ளனர்.
சண்டை பயிற்சிகளை இடி மின்னல் இளங்கோ இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தின் இயக்குனரே இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 5 பாடல்கள் மூன்று அனல் பறக்கும் சண்டை காட்சிகள் என 2 கட்ட படப்பிடிப்புகளாக 35 நாட்கள் திருவள்ளூர், திருத்தணி மற்றும் பாண்டிச்சேரியின் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது, இதன் போஸ்ட் ப்ரோடக்ஷசன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
English Summary
famous directors mahizh thirumeni and vikaraman associate director logu will make his debut in film paraparappu