ரூ.32 கோடிக்கு பங்களாவை விற்றார்! - கங்கனா ரனாவத்! - Seithipunal
Seithipunal


பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் நடிகை, தயாரிப்பாளர் என இருந்து, இணை இயக்குனராக சில திரைப்படங்களில் வேலை பார்த்த  நிலையில், தற்போது எமர்ஜென்சி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து உள்ளார். 

இந்நிலையில், கங்கனா ரனாவத்துக்கு சொந்தமான பங்களா ஒன்று மும்பை பாலிஹில் பகுதியில் இருந்துள்ளது. மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக இந்த பங்களா மீது புகார் வந்தது. அப்போது ஆட்சியில் இருந்த உத்தவ் தாக்கரே, இந்த பங்களாவை  இடிக்க உத்தரவிட்டார். 

இதையடுத்து, கங்கனா ரனாவத் இடிப்பு பணிக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கினார். 2017ம் ஆண்டு இந்த பங்களாவை ரூ.20 கோடிக்கு வாங்கியிருந்தார் கங்கனா ரனாவத். இந்நிலையில் இந்த பங்களாவை  ரூ.32 கோடிக்கு விற்றுள்ளார்.

இந்த பங்களாவை கோவையை சேர்ந்த தொழிலதிபர் சுவேதா என்பவர் கங்கனாவிடம் இருந்து வாங்கியுள்ளார். மொத்தம் 3,075 சதுர அடி கொண்ட இந்த பெரிய பங்களாவில் நீச்சல் குளம், ஹோம் தியேட்டர், ஜிம் வசதிகள் ஆகியவை  உள்ளன. 

மேலும்,  சில படங்களில் நடிக்க கங்கனா ரனாவத் சம்பளம் வாங்காமல், லாபத்தில் பங்கு வாங்கிக்கொள்கிறேன் என்று ஒப்பந்தம் போட்டிருந்தார். அந்த படங்கள் அனைத்தும் அவருக்கு படுதோல்வி அடைந்து விட்டன. இதனால் தான்  தனது பங்களாவை அவர் விற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

He sold the bungalow for Rs 32 crore Kangana Ranaut


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->