ஆளுனருடைய இப்போக்கு ஆணவத்தின் உச்சம், அயோக்கியத்தனம் - கொந்தளிக்கும் திமுகவின் கூட்டணி கட்சிகள்!
Thiruvalluvar RN Ravi vck congress dmk
தமிழ்நாடு அரசை மட்டுமல்ல, தமிழனத்தையும், திருவள்ளுவரையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று, தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு சார்பில் திருவள்ளுவர் தினம், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இன்று (15.01.2025) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
ஆளுநர் மாளிகையில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில் காவி உடையில் திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்திருக்கிறார்.
அய்யன் திருவள்ளுவருக்கு சாதி, மொழி, மதம் என்பது கிடையாது. அவருக்கு காவி உடை அணிந்து, சித்தரிப்பது ஏற்க முடியாது. ஆளுநர் ரவி, அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து வெளியிடுவது சட்டத்துக்கு புறம்பானது. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படி செய்வது கண்டனத்துக்குரியது. வருத்தத்துக்குரியது.
தமிழ்நாடு அரசை மட்டுமல்ல, தமிழனத்தையும், திருவள்ளுவரையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்" என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் விசிக வன்னியரசு விடுத்துள்ள கணடன செய்தியில், "சனாதன ஒழிப்பு போராளியை சனாதனத்தின் அடையாளமாக ஆளுனர் பிதற்றுவது அறிவீனம். ஆளுனருடைய இப்போக்கு ஆணவத்தின் உச்சம்.
கண்ணியமுள்ள பதவியில் பிழைப்புவாதம் நடத்துவதோடு நிறுத்திக்கொள்வது நல்லது. அதை விடுத்து சனாதனத்தை நிறுவ அய்யன் வள்ளுவரை துணைக்கழைப்பது அயோக்கியத்தனமே" என்று கடுமையாக விமர்சித்து கணடனம் தெரிவித்துள்ளார்.
English Summary
Thiruvalluvar RN Ravi vck congress dmk