ஓடிடியில் வெளியாகும் ஹாய் நானா - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


பொதுவாக சினிமாவில் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் செண்டிமெண்ட் படங்களுக்கு குறைந்தபட்ச வெற்றி இலக்கு இருக்கும். ஏனென்றால், அம்மா-மகன், அப்பா-மகன், அண்ணன் -தங்கை, அப்பா-மகள் செண்டிமெண்ட் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் உருக வைக்கும். 

அந்த வகையில், அப்பா-மகள் செண்டிமெண்ட்டை வைத்து ’ஹாய் நானா’ படத்தில் நடித்துள்ளார் நடிகர் நானி. இவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏழாம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இயக்குநர் சவுர்யா இயக்கி இருந்த இந்தப் படம் தெலுங்கில் வெற்றிப் பெற்ற அளவுக்கு தமிழில் பெரிதாக எடுபடவில்லை. அதற்கு காரணம் அந்த சமயம் வெள்ளப் பாதிப்புகள் இருந்தது தான். 

இந்த நிலையில், இந்தப் படம் ஜனவரி 4ம் தேதி அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதுமட்டுமல்லாது, பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு ‘சலார்’, ‘அனிமல்’ உள்ளிட்ட படங்களும் ஓடிடியில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hi nanna movie ott release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->