ஓ ஹோ!!! நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
how much actress Rashmika Mandannas net worth
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, கன்னடத்தில் 2016-ல் வெளியான 'கிரிக் பார்ட்டி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

இதில் தெலுங்கில் நடித்த 'புஷ்பா' படம் திருப்புமுனையை ஏற்படுத்தியதுடன் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் நடிகையாக ராஷ்மிகா மாறினார். அவருக்கு மேலும் பட வாய்ப்புகளும் குவிந்தன.தமிழில் கார்த்தி ஜோடியாக 'சுல்தான்', விஜய்யுடன் 'வாரிசு' படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுசுடன் 'குபேரா' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தியில் நடித்த 'அனிமல்', 'சாவா' படங்களும் இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்துள்ளன. அதுமட்டுமின்றி ஒரு படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் கேட்பதாக தெரிகிறது .இந்த நிலையில் ராஷ்மிகா வைத்துள்ள சொத்துக்கள் விவரம் பற்றிய தகவல் இணையதளத்தில் பரவி வருகிறது.
அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.100 கோடியை எட்டும் நிலையில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஷ்மிகா மந்தனா சினிமாவை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும், பல வர்த்தக நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருந்தும் சம்பாதிக்கிறார்.
பெங்களூருவில் ரூ.8 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா வீடுள்ளது. மேலும் நிறைய விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி மும்பை, கோவா, கூர்க், ஐதராபாத் பகுதிகளிலும் அவருக்கு நிறைய சொத்துக்கள் உள்ளனவாம்.
English Summary
how much actress Rashmika Mandannas net worth