அடேங்கப்பா!!! 'ஜாத்'படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு!!! - படக்குழு
first song film Jaath released tomorrow
தெலுங்கு திரையுலக இயக்குனர் கோபிசந்த் மலினேனி. இவர் பாலிவுட் நடிகர் சன்னி தியோலை வைத்து 'ஜாத்' படத்தை இயக்கியுள்ளார். மேலும் கோபிசந்த் பாலிவுட்டில் இயக்கும் முதல் படம் இதுவாகும்.இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா,ரம்யா கிருஷ்ணன், சயாமி கெர் , ஜெகபதி பாபு மற்றும் ரந்தீப் ஹுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் பீப்பிள் மீடியா பேக்டரி இணைந்து தயாரிக்கின்றனர்.மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்ததுள்ளது . இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் , 'டச்கியா' என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது.
English Summary
first song film Jaath released tomorrow