'ஹரிஹர வீரமல்லு' யுகாதி ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்ட படக்குழு...!!! ரசிகர்கள் ஆரவாரம்...!!! - Seithipunal
Seithipunal


பிரபல தெலுங்கு திரையுலக நடிகரும் ,ஆந்திர பிரதேச துணை முதல்வருமான 'பவர் ஸ்டார் பவன் கல்யாண்'. இவர் தற்போது ஜனசேனா கட்சியிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

இருப்பினும் நடிப்பை விட்டுக்கொடுக்காமல் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் 'ஹரி ஹர வீரமல்லு'.

இத்திரைப்படத்தின் 2 வது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது.பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் பாடலை ஹிட் அடித்து வருகிறார்கள்.

மேலும் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்தின் இசையமைப்பை மேற்கொள்கிறார்.இதில் ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்தனம் தயாரிக்கும் ' ஹரி ஹர வீர மல்லு' .  

இந்த திரைப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.இது தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

team Harihara Veeramallu released Ugadi special poster


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->