காவாலா!!! கயாடு லோஹரின் புத்துணர்ச்சிக்கான டிப்ஸ் வேண்டுமா?
Want tips for refreshing Kayadu Lohar
'கயாடு லோஹர்'அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர். இவர் கன்னட படத்தின் மூலம் கடந்த 2021ம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' யில் நடிகையாக அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து, 2022ம் ஆண்டு வெளியான ஸ்ரீ விஷ்ணு நடித்த 'அல்லூரி' மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.கடந்த பிப்ரவரி 21ம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பிலும் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் தான் 'டிராகன்'.
இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் சமூக வலைதளங்களில் அதிகம் தேடும் நடிகையாக தற்போது மாறிவிட்டார்.இப்போது கயாடு, 'இதயம் முரளி' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அடுத்ததாக அவர் தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நடிகை கயாடு லோஹர் அவருடைய புத்துணர்ச்சிக்கான காரணத்தினை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அவ்வகையில், அதிகாலை எழுந்ததும் குறைந்தபட்சம் 1 மணி நேரம் யோகா செய்த பின் 1\2 மணி நேரம் ஸ்ட்ரெச்சிங் பயிற்சியும் 1 மணி நேரம் நடைபயிற்சியும் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.இது தற்போது வைரலாகி வருகிறது.
English Summary
Want tips for refreshing Kayadu Lohar