நான் பொது சொத்து அல்ல....ரசிகர்கள் மீது நடிகை டாப்ஸி காட்டம்! - Seithipunal
Seithipunal


நடிகர், நடிகைகள் பொது இடங்களில் கூடும் போது ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு 
செல்பி எடுப்பது வழக்கம். அப்போது சிலர் சிரித்த முகத்துடன் போஸ் அளிப்பார்கள். சிலர் அதை விரும்பாமல் வேகமாக சென்று விடுவார்கள்.

இன்னும் சிலர் கோபத்தை வெளிப்படுத்துவதும் உண்டு. அந்த வகையில், பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்களை துரத்திச் சென்று போட்டோ, வீடியோ எடுப்பவர்கள் 'பாப்பரசி' எனக் கூறப்படுகிறார்கள். இந்நிலையில், 'பாப்பரசி'கள் குறித்து நடிகை டாப்சி காட்டமாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர்,  'நான் பிரபலமான ஒரு நபர், பொது சொத்து கிடையாது. இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. திரைக்கு பின் இருக்கும் பெண்கள் 'இல்லை என்றால் இல்லை' ஆனால், அதுவே நாங்கள் கூறினால் ஏற்க மாட்டார்கள்.

நான் முதலில் ஒரு பெண். அதன்பிறகுதான் நடிகை. நான் இப்படி சொல்வதால், இது எனக்கு ஏற்ற தொழில் இல்லை என சிலர் நினைக்கலாம். ஆனால், நடிப்பு என்பது நான் விரும்பும் தொழில் என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I am not public property Actress Taapsee Kattam on fans


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->