பொறுத்தது போதும் பொங்கி எழு.. ஹீரோயினாக அறிமுகமாகும் சீரியல் நடிகை ஆயிசா!
Enough is enough. Serial actress Ayesha to debut as heroine
அஜித்தின் விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடித்துள்ள கணேஷ் சரவணன், சீரியல் நடிகை ஆயிஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான 'உப்பு புளி காரம் ' வெப் தொடரில் நடித்திருந்த சீரியல் நடிகை ஆயிஷா ,பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார்.
இந்நிலையில், சீரியல் நடிகை ஆயிஷா தற்போது ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். அதன்படி, அஜித்தின் விடாமுயற்சி, இரும்புத்திரை, ராவண கோட்டம் போன்ற படங்களில் நடித்த கணேஷ் சரவணன், ஆயிஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படம் மூலம் கணேஷ் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும் அறிமுக இயக்குனரான ஜாபர் இப்படத்தை இயக்குகிறார்.மேலும் இந்த படத்தில் மறைந்த நடிகர் ரகுவரன் சகோதரர் ரமேஷ், நடிகர் புகழ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.இந்தப்படத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 புகழ் ஆயிஷா கணேஷின் மனைவியாக நடிக்கிறார்,
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இதுகுறித்து ஜாபர் கூறும்போது, "நான் எட்டு ஆண்டுகளாக இயக்கத்திற்காக முயற்சி செய்து வருகிறேன். நான் ஊடகங்களில் பணியாற்றியதால், கலைஞர்களை நேர்காணல் செய்து அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அந்த அனுபவங்களில் இருந்துதான் இந்த படத்தை உருவாக்குகிறேன்" என்றார்.
மேலும் "நானும், கணேஷும் ஃப்ரெண்ட்ஸ் அதனால அவன்கிட்ட சில ஸ்கிரிப்ட்களை சொன்னேன். காமெடி ஜானர் முதல் படத்துக்கு நன்றாக இருக்கும் என்று நினைத்து இந்த கதையை நகர்த்தினோம். மனைவியைக் கண்டு பயப்படும் பக்கத்து வீட்டுப் பையன் கதாபாத்திரம்தான் அவரது கதாபாத்திரம். மணிகண்டன் தற்போது நடித்து வரும் கதாபாத்திரம் போலவே இந்த கதாபாத்திரமும் இருக்கும்" என்கிறார் ஜாபர்.
English Summary
Enough is enough. Serial actress Ayesha to debut as heroine