'காட் ஆப் லவ்' ('STR 51') படத்தில் புதிய கெட்டப்பில் சிம்பு; இணையத்தில் வைரலான புகைப்படம்..! - Seithipunal
Seithipunal


நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள "தக் லைப்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 03 புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியாகி, அவருடைய ரசிகர்களை சந்தோசப்படுத்தியுள்ளன. 

அந்த வகையில், அடுத்ததாக திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'STR - 49' படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'STR - 50' திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

அடுத்ததாக, 'ஓ மை கடவுளே', 'டிராகன்' போன்ற படங்களை இயக்கி உள்ள இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகாக 'STR-51' என பெயரிடப்பட்டிருந்த இந்த  படத்தின் டைட்டில் அறிவிப்பை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இப்படத்துக்கு 'காட் ஆப் லவ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படம் கோடை விடுமுறையின் போது வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் புகைப்படம் ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு இது வரை நடிக்காத புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். சிம்புவின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://x.com/Dir_Ashwath/status/1886735601434599434


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Simbu in a new look in the film God of Love


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->