ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் அதர்வா தம்பி! அப்பா, அண்ணனின் ஆசிர்வாதம் எனக்கு இருக்கிறது - ஆகாஷ் முரளி!
I have my brother blessings Akash Murali
மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளி கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா ஏற்கனவே சினிமாவில் நடித்து வருகிறார். இதற்கு இடையில் முரளி இளைய மகன் ஆகாஷ் முரளி நேசிப்பாயா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார்.
ஆகாஷ் முரளி ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி நடிக்கிறார். பிரிட்டோ தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இந்த படத்தை இயக்குகிறார்.
இது குறித்து ஆகாஷ் முரளி தெரிவித்ததாவது, எனது அப்பா அண்ணனை தொடர்ந்து நானும் சினிமாவில் களமிறங்கியிருப்பது மகிழ்ச்சி. இருவரது ஆசீர்வாதங்களும் எனக்கு எப்போதும் இருக்கிறது. விஷ்ணுவர்தன் இயக்கத்திலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் முதல் படத்திலேயே எனக்கு கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.
இது குறித்து நடிகர் அதர்வா தெரிவித்ததாவது, என்னுடைய குடும்பத்திற்கு இது இன்னொரு பெருமையான தருணம். ஆகாஷ் கனவுக்கு வடிவம் கொடுத்த விஷ்ணு வரதனுக்கு நன்றி. பானா காத்தாடி படத்தில் நான் அறிமுகமானபோது என் அப்பா என்னுடன் இருந்தார். இப்போது அவர் இல்லை. ஆனால் ஆகாஷ் இப்போது கதாநாயகனாக அறிமுகம் ஆகி இருக்கும் நிலையில் எனக்கு அப்பாவின் மனநிலை புரிகிறது. இது மிகவும் மன நிறைவாக இருக்கிறது ரசிகர்கள் அனைவரும் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
I have my brother blessings Akash Murali