மத்திய பட்ஜெட் ஒரு கானல் நீர் - செல்வப்பெருந்தகை..!
tamilnadu congrass leader selvaperunthagai speech about union budget
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கான எந்த திட்டமும் இடம்பெறவில்லை. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:- "உலகில் 5 நாடுகளில் 20 கோடிக்கும் கீழாக மக்கள் தொகை உள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 15 சதவீதம் பேர், அதாவது 20 கோடிக்கு மேல் மக்கள் வறுமையில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. ஆனால் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டு விட்டதாக ஏமாற்றுகிறார்கள். இந்த பட்ஜெட் கானல் நீரைப் போன்றது. தண்ணீர் இருக்கிறது என்று நினைத்து போனால் ஏமாந்து போய்விடுவார்கள்.
அதே போலத்தான் மக்களை ஏமாற வைத்துள்ளார்கள். பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிதி எதுவும் கொடுக்காமல் மத்தியில் பிரிவினை வாதங்களை பேசி ஏமாற்றி அரசியல் செய்வது. இது தான் மோடி அரசு" என்றுத் தெரிவித்தார்.
English Summary
tamilnadu congrass leader selvaperunthagai speech about union budget