24 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை...நடிகை ரோஜா ஏக்கம் !   - Seithipunal
Seithipunal


 நானும் எனது கணவரும் காதலித்த நேரத்தில் 24 குழந்தைகள் பெத்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால், அப்போது எனக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர் சொன்னதால் என் மனதை உடைந்து விட்டது என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். 

தெலுங்கு படங்களின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர்  நடிகை ரோஜா,1990 கால கட்டங்களில் தென்னிந்தியா திரை உலகையே தனது வசம் ஆக்கி கலக்கியவர். ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரோஜா,தொடர்ந்து ரஜினிகாந்த், சரத்குமார், மம்முட்டி, அர்ஜுன், பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

சினிமா மட்டுமல்லாமல் அதையும் தாண்டி அரசியலிலும் கால் பதித்த நடிகை ரோஜா,ஆந்திர அரசியலில் முக்கிய துறை அமைச்சராகவும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமைலான ஆட்சியில் பதவிவகித்தார். அரசியலில் எதிர் கட்சிகளுக்கும் பதிலடி கொடுப்பதில் வல்லவராக திகழ்ந்தார் ரோஜா.இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து 2001-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியும் ரோஜாவும் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், " நானும் எனது கணவரும் காதலித்த நேரத்தில் 24 குழந்தைகள் பெத்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அந்த குழந்தைகளை உலக நாடுகள் போற்றும் வகையில், வளர்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

ஆனால், அப்போது எனக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர் சொன்னதால் என் மனதை உடைந்து விட்டது. பின், கடவுள் எனக்கு இரண்டு குழந்தைகளை பரிசாக கொடுத்தார். நம்மளை மீறி ஒரு சக்தி இருப்பதை அப்போது தான் உணர்ந்தோம்" என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I want to have 24 children Actress Roja nostalgia


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->