அழகாக இருக்க வேண்டுமென்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள நான் ஒருபோதும் நினைத்ததில்லை...! - ரகுல் பிரீத் சிங் - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை 'ரகுல் பிரீத் சிங்', தென்னிந்திய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர். இவர்தமிழ் திரையுலகில், "தடையற தாக்க, என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, இந்தியன் 2, அயலான்" உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது பாலிவுட் நடிகர் 'அஜய் தேவ்கன்' மற்றும் ஆர்.மாதவனுடன் இணைந்து 'தே தே பியார் தே 2' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் சினிமாவில் நுழைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, அழகாக இருக்க வேண்டும் என்று நான் எதையும் செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

ரகுல் பிரீத் சிங்:

மேலும் அவர், "நான் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை. எனக்கு அதற்கான அவசியமும் இல்லை.

ஏனென்றால் கடவுள் எனக்கு அழகிய முகத்தை கொடுத்துள்ளார். அதேபோல யாராவது அழகாக காட்சியளிக்க அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என நினைத்தால் அதில் தவறில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இது தற்போது அவரின் ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I never thought of getting surgery to look beautiful Rakul Preet Singh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->