நடிகர் விஜய் தேவரகொண்டா – "அவுரங்கசீப்பை அறைய விரும்புகிறேன்" – பரபரப்பை ஏற்படுத்திய பேச்சு!
Actor Vijay Deverakonda I want to slap Aurangzeb a speech that caused a stir
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா, சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற 'ரெட்ரோ' திரைப்பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் அவர் அளித்த சில பதில்கள், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நிகழ்ச்சியில், "நீங்கள் டைம் டிராவல் செய்து கடந்த காலத்திற்குப் போனால் யாரை சந்திக்க விரும்புவீர்கள்?" என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, "ஆங்கிலேயர்களை சந்தித்து, அவர்களுக்கு பளார் பளார் என இரண்டு அறை கொடுக்க விரும்புகிறேன்," எனக் கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
அதேபோல், இன்னொருவரை அறைய விரும்புவதாகவும் அவர் கூறினார். அவர் வேறு யாரும் இல்லை – அவுரங்கசீப் தான்! சமீபத்தில் பார்த்த 'சாவா' திரைப்படத்தின் தாக்கத்தில், அவுரங்கசீப்பை நேரில் சந்தித்தால் பளார் என அறை கொடுக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். விஜய் தேவரகொண்டாவின் இந்த பதில்கள் தற்போது இணையத்தில் தீவிரமாக வைரலாகி வருகின்றன.
இதையடுத்து, பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார். "பயங்கரவாதிகளுக்கு மூளை இல்லை. அவர்களுக்கு கல்வி மிகவும் அவசியம். பாகிஸ்தானுக்கு தன் சொந்த பிரச்சினைகளை கையாள முடியவில்லை. ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் முரண்பட நினைக்கிறது. காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு ஓர் பகுதியாகும். இந்தியாவும் பாகிஸ்தானும் போர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாளொரு நாள் பாகிஸ்தானியர்கள் தங்கள் அரசாங்கத்தால் சலித்துத் தாமாகவே கிளர்ச்சி செய்யப்போகிறார்கள்," என்றார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டாவின் உற்சாகமான பேச்சுகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், இணையத்தில் பரபரப்பையும் உருவாக்கி இருக்கின்றன.
English Summary
Actor Vijay Deverakonda I want to slap Aurangzeb a speech that caused a stir