''இந்தியன் 2'' திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.!  - Seithipunal
Seithipunal


ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவான 'இந்தியன்'  திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர். 

அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

''இந்தியன் 2'' திரைப்படம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'கதறல்ஸ்', 'பாரா' என்ற இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இந்த திரைப்படத்தின் டிரைலர் வருகின்ற ஜூன் 25ஆம் தேதி வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian 2 Movie Trailer Release Update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->