லியோ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா விஜய்- நா ரெடி பாடலில் இடம்பெற்றுள்ள மறைமுக குறியீடுகள்!!
Is Vijay playing a double role in Leo Na Ready song's covert symbols
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது, லியோ படத்தை லோகேஷ் கணகராஜ் இயக்குகிறார். இதனாலேயே நேற்று வெளியான பாடலில் பல குறியீடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று வெளியான வீடியோவில் ரசிகர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதில் பல சுவாரசியமான தகவல்களையும் கண்டுபிடித்துள்ளனர்.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத்தின் இசையமைப்பில், நடிகர் விஜய், அனிருத் மற்றும் பின்னணி பாடகர் அசல் கோலார் குரலில், விஷ்ணு எட்வன் வரிகளில் லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பல மறைமுக குறியீடுகள் இருப்பதாக ரசிகர்கள் பலர் அதை டீகோட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தொடக்கத்தில் தயாரிப்பாளரின் பெயர் வரும் இடத்தின் சுவற்றில் இரு பக்கமும், தலா ஒரு ராஜா சீட்டும், மற்றும் இரு ஜேக் சீட்டுகளும் உள்ளது.
எனவே இந்த படத்தில் இரண்டு கதாநாயகர்கள் இருப்பார்கள் என தெரிகிறது. பிறகு இயக்குநர் பெயர் வரும் ஃபிரேமில் சாக்லேட்டில் கைகளை முக்கிய விஜய்யின் புகைப்படமும், ஆயுதங்களும், துப்பாக்கியும், மேப் போன்ற பேப்பர் ஒன்றும் இருக்கிறது. மேலும் அதில் இருக்கும் விஜய்யின் முகத்துக்கும் நடனம் ஆடும் விஜய்யின் முகத்துக்கும் பல வித்யாசங்கள் உள்ளது. எனவே இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று பலர் கூறி வருகின்றனர்.
மேலும் எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ் என்ற வரிகள் வரும் இடத்தில் விஜய் கத்தியுடன் இருக்கும் படம் ஒரு பக்கமும். விஜய் கையில் காப்பு மட்டும் இருக்கும் படம் மற்றொரு பக்கமும் இருக்கிறது. எனவே இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்க வாய்ப்புகள் உள்ளது.
ஏனெனில் ஆயுதத்துடன் இருக்கும் புகைப்படங்களில் விஜயின் கையில் காப்பு இல்லை. எனவே விஜய் இந்த படத்தில் இடத்தை வேடத்தில் தான் நடிக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த் என இரு கதாநாயகிகள் இருப்பதாலும் இந்த சந்தேகம் வலுத்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு லியோ திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Is Vijay playing a double role in Leo Na Ready song's covert symbols