இளம் நடிகருடன் ஐஸ்வர்யா 2வது திருமணம்.?.. வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா. இயக்குனரான ஐஸ்வர்யா இதுவரை 3 மற்றும் வை ராஜா வை ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

 தற்போது இவர் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்தை வைத்து லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த செய்தி ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு இரு குடும்பத்தினரும் சேர்த்து வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. தற்போது இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபல இளம் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ishwarya Rajinikanth will be 2nd marriage


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->