திருமணம் செய்வதை விட ரிலேஷன்ஷிப்பில் இருப்பதையே விரும்புகிறேன்; ஸ்ருதி ஹாசன்..!
I will not get married in my life says shruti haasan
திருமணம் செய்வதை விட ரிலேஷன்ஷிப்பில் இருப்பதையே விரும்புகிறேன் என நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஸ்ருதி தற்போது ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ருதிஹாசன் இதற்கு முன் சாந்தனு ஹசாரிகா என்பவர் உடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ஆனால் அவர்கள் திடீரென பிரேக்கப் செய்து கொண்டு பிரிந்து விட்டனர். ஸ்ருதி ஹாசன் மீது பல்வேறு கிசுகிசுக்களும் அடிக்கடி வெளிவந்த இருக்கும்.
சில வருடங்களுக்கு முன்பு ஸ்ருதி அளித்த பேட்டியில் தான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என கூறி இருந்தார். அது பற்றி கேட்டதற்கு தான் தற்போதும் அந்த முடிவில் இருந்து மாறவில்லை என கூறி இருக்கிறார்.
அதில் அவர் "என் வாழ்க்கையில் திருமணமே செய்யமாட்டேன் எனவும் கூறமாட்டேன். Never என்ற வார்த்தையை என்னால் சொல்ல முடியாது. வாழ்க்கை என்பது Unpredictable. ஆக, ஸ்பெஷலான ஒருவர் வந்தால் அதை பற்றி யோசிக்கலாம். ஆனால், அது நடக்கும் என எனக்கு தோன்றவில்லை" என ஸ்ருதி கூறியுள்ளார்.
English Summary
I will not get married in my life says shruti haasan