20 வருடங்களுக்கு பின் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் விஜய்யின் 'சச்சின்' திரைப்படம்..!
Vijays Sachin movie to be rereleased after 20 years
20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு விஜயின் சச்சின் திரைப்படம் படம் மீண்டும் திரைப்படவுள்ளது.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்கின்றனர்.
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் 'சச்சின்' திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையவுள்ளது.

அதனை கொண்டாடும் விதமாக ,மீண்டும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சச்சின் திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் உருவான இப்படத்தில் வடிவேலு, சந்தானம், பாலாஜி, ரகுவரன் ஆகியோர் நடித்து இருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.
English Summary
Vijays Sachin movie to be rereleased after 20 years