மீண்டும் கைகோர்க்கும் விஷால் மற்றும் மித்ரன் கூட்டணி..! - Seithipunal
Seithipunal


வெற்றி கூட்டணியான விஷால் மற்றும் மித்ரன் இருவரும் மீண்டும் இணைபோவதாக செய்திகள் வெளியாகியுள்ளது., சர்தார் 02 படத்தை முடித்து விட்டு, இரும்பு திரை 02 படத்தை மித்ரன் இயக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இதன்பின் வெளியான ரத்னம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

விஷாலுக்கு  தற்போது கைவசம் துப்பறிவாளன் 02 திரைப்படம் தான் இருக்கிறது. ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பும் எப்போதும் துவங்கும் என உறுதியாக தகவல் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஷாலின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் மிக முக்கியமான ஒன்று இரும்பு திரை. அர்ஜூனுடன் இணைந்து விஷாலின் நடிப்பும் இந்த படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது.

இப்படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ். மித்ரன் இரும்புத்திரை 02 ஆம் பாகத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிக்கியுள்ளது, இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal joins hands with a superhit director again


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->