ரூ.3.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - அசாமில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் உள்ள நாகோன் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனம் ஒன்றை போலீசார் வழி மறித்து சோதனை செய்தனர்.

அதில், வாகனத்தின் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 532.46 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போதைப்பொருளை பறிமுதல் செய்ததுடன் வாகனத்தின் ஓட்டுநரையும் கைது செய்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.3.5 கோடி என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three crores worthable drugs seized in assam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->