"நீதிமன்ற அவமதிப்பு" "காசு கொடுத்து வாங்கப்பட்ட ஆஸ்கார்.?" சவுக்கு சங்கரை போல தூக்கப்படுவாரா பிரபல இசையமைப்பாளர்.! - Seithipunal
Seithipunal


95வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த நாட்டு நாட்டு என்ற பாடல் ஆஸ்கார் விருது வென்றது. இதன் மூலம் ஆஸ்கார் விருதை வென்ற இரண்டாவது இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றார் கீரவாணி. இது தொடர்பாக இந்த விருது பெற்றதற்காக பாராட்டுக்களும் அதே நேரத்தில் இவற்றிற்கு எதிரான கருத்துக்களும் சமூக வலைதளங்களில் வலுத்து வருகின்றன.

காசு கொடுத்து தான் ஆஸ்கார் விருதுகளை பட குழு வாங்கி இருக்கிறது என ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இதுகுறித்து அவர் "காசு கொடுத்து தான் ஆஸ்கார் விருதுகளை வாங்கி இருக்கிறார்கள் என்பது போன்ற வெட்டி வியாக்கியானங்களை விட்டுவிட்டு நம் நாட்டின் திரைப்படம் ஒன்று உலக சினிமாவில் உயர்ந்த விருதான ஆஸ்கார் விருதை வென்றிருப்பதை கொண்டாடுங்கள்" என தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் "விருதுகள் காசு கொடுத்து தான் வாங்கப்படுகின்றன என்பதில் ஓரளவு உண்மை இருந்தாலும் எல்லா விருதுகளும் எல்லா அங்கீகாரங்களும் அவ்வாறு கிடைப்பதில்லை. விருதுகளில் மட்டும்தான் பாரபட்சம் இருக்கிறதா என்ன? கேள்வி எழுப்பினார்.

இங்கு நீதிமன்ற தீர்ப்புகளே விற்கப்படும் நிலையில், இது போன்ற ஒரு விஷயத்தை ஊதி பெரிது படுத்துவது தேவையற்றது என கூறினார். நம் நாட்டைச் சார்ந்த சினிமா உலக அரங்கில் ஒரு அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது. அதனை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். அதனை விட்டு விட்டு இது போன்ற சர்ச்சைகளை கிளப்புவது தேவையற்றது" எனக் கூறியிருக்கிறார்.

இங்கு நீதிமன்ற தீர்ப்புகளே விற்கப்படுவதாக பேசியுள்ள அவர் சவுக்கு சங்கரை போல நீதிமன்ற அவதூறு வழக்கில் சிக்குவாரா என்றும், சவுக்கு சங்கர்க்கு மட்டும் தான் சட்டம் கடமையை செய்யும் இவர்களை கண்டு கொள்ளாது என்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

james vasanth request fans to enjoy the success of indian cinema


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->