வாரிசு: ரஞ்சிதமே பாடல் நடன இயக்குனர் மீது பாலியல் புகார்! அதிர்ச்சியில் திரையுலகம்! - Seithipunal
Seithipunal


வாரிசுதிரைப்படத்தில் வருமாம் ரஞ்சிதமே பாடலின் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது, இளம் நடனக் கலைஞர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண், திரைப்பட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்ற ஷேக் ஜானி பாஷா மீது சைதராபாத், ராய்துருக்கம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், ஜானி பாஷாவிடம், சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்த படப்பிடிப்பின் போது அவருடன் நடன கலைஞராக பணிசெய்து உள்ளேன். 

அப்போது ஓட்டல்களில் வைத்து தன்னை ஜானி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வீட்டிற்கு வரவழைத்து கூட தன்னை வன்கொடுமை செய்ததாக அந்த புகார் மனுவில் இளம்பெண் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JaniMaster Ranjithame Choreographer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->