BB அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும், ஜூலி செய்துகொண்டிருக்கும் வேலை இது தான்.!
julie meet all housemates after bb ultimate
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிந்ததை தொடர்ந்து ஜூலி பிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்து அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்தவர் தான் ஜூலி. இவர் வீர தமிழச்சி என்று பலராலும் கொண்டாடப்பட்டவர். ஆனால், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் ஜூலி கலந்து கொண்ட பின்னர் மிகவும் மோசமான பெயர் எடுத்தார்.
பலரிடமும் திட்டு வாங்கி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்ததாக கூறப்பட்டது. ஆனால், அவர் நடிப்பில் எந்த படங்களும் வெளியானதாக தெரியவில்லை.
பின் சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அடிக்கடி ஏதாவது சர்ச்சையை உருவாக்கி பலரிடம் திட்டு வாங்குவது அவரது வழக்கம்.
இந்தநிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி முதல் சீசனில் கலந்து கொண்ட போது தனக்கு கிடைத்த அவப்பெயரை முற்றிலும் மாற்றி புது மனுஷியாக வெளியில் வந்தார். அவருக்கு தற்போது ரசிகர் கூட்டமும் அதிகரித்துள்ளது.
இத்தகைய நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிந்ததை தொடர்ந்து ஜூலி பிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்து அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
English Summary
julie meet all housemates after bb ultimate