வசூலில் சாதனை படைத்துள்ள 'கல்கி 2898 ஏடி'.. 5 நாட்களில் இவ்வளவு வசூலா?! - Seithipunal
Seithipunal



நாக் அஸ்வின்  இயக்கத்தில் பிரபாஸ் முதன்மை கதாப் பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இந்தப் படத்தில் பிரபாஸுடன் கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.


வைஜயந்தி மூவிஸ் சார்பில் அஷ்வினி தத் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். மற்றும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களான AA பிலிம்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை விநியோகம் செய்துள்ளன.

சந்தோஷ் நாராயண் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் கடந்த ஜூன் 27ம் தேதி உலகெங்கிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. 

இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், முதல் நாள் முடிவில் ரூ. 191 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து 4 நாட்கள் முடிவில் ரூ. 555 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் 5ம் நாளான நேற்று ஒரு நாளில் இப்படம் ரூ. 84 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் 5ம் நாள் வசூல் ரூ. 635 கோடியாக உள்ளது. மேலும் மிக விரைவில் இந்த திரைப்படம் ரூ. 1000 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalki 2898 AD 5 Days collection


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->