'கல்கி 2898 ஏடி' படத்தின் டிக்கெட் விலையை உயர்த்திய தெலுங்கானா அரசு.. ரசிகர்கள் அதிருப்தி..!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் நாக் அஸ்வின் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் தான் கல்கி 2898 ஏடி. வைஜயந்தி மூவிஸின் கீழ் அஸ்வினி தத் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். கடந்த 2020 ம் ஆண்டு அறிவிக்கப் பட்ட இந்த திரைப்படம் கோவிட் தொற்று உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது.

ரூ. 600 கோடி மதிப்புள்ள பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த திரைப்படம் முதலில் தெலுங்கில் படமாக்கப் பட்டது. இதையடுத்து ஹிந்தியில் படமாக்கப் பட்டது. இது ஒரு அபோகலிப்டிக் உலகதில் நடைபெறும் கதையாக இந்த படம் படமாக்கப் பட்டுள்ளது. 

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரபாஸ், கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வரும் ஜூன் 27ம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பட்ஜெட் மிகவும் அதிகமாக இருப்பதால் டிக்கெட் விலையை உயர்த்தவும், அதிக காட்சிகள் திரையிடவும் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தெலுங்கானா  அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.

இதை ஏற்றுக் கொண்ட அரசு, முதல் 5 நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிடவும், மேலும் சாதாரண திரையரங்குகளில் ரூ. 70 வரையும், மல்டிப்ளெக்ஸ்களில் ரூ. 100 வரையும் டிக்கெட் விலையை உயர்த்தவும் அனுமதி அளித்துள்ளது. 

இதையடுத்து டிக்கெட் விலை ரூ. 265 முதல் ரூ. 495 வரை அதிகரித்து இருப்பதாக தெலுங்கானா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalki 2898 AD Movie Ticket Price Hike in Telangana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->