பிரபாஸின் "ப்ராஜெக்ட் கே" படத்தில் இணையும் கமல்ஹாசன்.. பட குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் "புராஜெக்ட் கே". இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

சுமார் 400 கோடி செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அதனை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வீடியோ ஒன்றை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் ''இந்த படத்தின் வாயிலாக பல திரையுலக சூப்பர் ஸ்டார்களை ஒன்றிணைக்கிறோம். எங்களுக்கு இந்த பூமியை மறைக்கும் அளவிற்கு ஒரு நிழல் தேவைப்பட்டது. அது நம் கமல் சார் மட்டுமே" எனக் குறிப்பிட்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Haasan joins Prabhas ProjectK movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->