விஜயால்.. ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கங்கை அமரன்.! விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் கங்கை அமரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார். அதில், "விஜய் அவருடைய அப்பா அம்மாவை வேண்டாம் என்று சொன்னதில் எனக்கு மிகவும் வருத்தம். அவங்க வீடு எங்க வீட்டிற்கு பக்கத்தில் தான் இருக்கிறது.

 நாங்கள் எல்லாரும் சந்திரசேகர் நாடகத்திற்கு வந்தவர்கள். நடந்தது நடந்ததுதான். நமக்கு வெளிப்படையாக ஒரு விஷயம் தெரியும் பொழுது, அது பற்றிய விமர்சனங்களை தெரிவித்து தான் ஆக வேண்டும். நாங்கள் பெரியவர்கள் அப்படித்தான் கூறுவோம். 

இதையெல்லாம் நாங்கள் சொல்லாமல் வேறு யார் சொல்வார்கள்? விஜய் பிறந்த பொழுது விஜய் அம்மா எங்களுடைய குழுவில் பாட்டு பாடிக் கொண்டு இருந்தார். விஜய்யை எப்படி வளர்த்தார்கள் என்று அருகில் இருந்து பார்த்த எனக்கு நன்றாக தெரியும். விஜய் தனது தாய் தந்தையை இப்படி உதாசீனம் செய்வது எனக்கு எரிச்சலாக இருக்கிறது. 

என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பா அம்மாவை விலக்கி வைப்பதாக கூறியதும் அடுத்த நாளே பத்திரிகையில் கூறினேன். என்னை ஃபாலோ பண்ண பலபேர் இருக்காங்க. அவர்களையும் தள்ளி வைக்கிறேன் அப்படின்னு சொல்ல சொன்னேன். விஜய் நிறைய தோல்விகளை சந்தித்த போதெல்லாம் அவருக்கு ஆதரவாக இருந்தது அவரின் அம்மா அப்பா தான். 

அதையெல்லாம் மறந்து வீட்டு இனி வாழ்ந்து என்ன செய்யப் போகிறார்? விஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து அவர்களுடைய அப்பா அம்மாவை விட்டு விடாதீர்கள் என்று நீங்கள் கூறுங்கள்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kangai amaran about vijay parents


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->