3 கான்களையும் அரசியலில் ஈடுபடுத்த கங்கனா ரனாவத் முடிவு? - Seithipunal
Seithipunal


பாலிவுட்டில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கேங்ஸ்டர் படத்தின் மூலம் நடிகை கங்கனா ரனாவத் அறிமுகமானார். இதற்கிடையே நடிகை கங்கனா ரனாவத்,  மணிகர்னிகா ஜான்சி ராணி படத்தினை கிறிஸ் ஜகர்லாமுடி உடன் இணைந்து இயக்கினார். இந்நிலையில்,  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள எமர்ஜென்சி படத்தை முழுக்க முழுக்க கங்கனா ரனாவத்தே இயக்கியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள நிலையில், இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் எமர்ஜென்சி திரைப்படம் வரும் செப்.6 -ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் கங்கனா ரனாவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ஷாருக்கான் , அமிர்கான் , சல்மான்கான்  என மூவரையும் தனது தயாரிப்பு, இயக்கத்தில் நடிக்க வைக்க மிகுந்த ஆசையாக உள்ளதாக கூறினார்.

மேலும் நன்றாக நடிக்கவும் அவர்களை அழகாக திரையில் காண்பிக்கவும் ஆசை என்று கூறிய அவர், அவர்களால் மிகப்பெரிய மக்கள் கூட்டத்துடன் ஒன்றிணைய முடியும் என்றும், இதனால் அவர்களால் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்க முடியும் என்று பேசினார்.  மேலும் பல நடிகர்களுடன்  நான் வேலை பார்க்க ஆவலுடன் இருப்பதாக தெரிவித்த அவர்,  தனக்கு மிகவும் பிடித்த இர்பான் கானை இயக்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளதாக தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kangana Ranauts decision to involve all 3 Khans in politics


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->