"நான் ஓர் அணிலாக இருக்க விரும்புகிறேன்." கருணாஸ்.. நெகிழ்ச்சி பதிவு.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யா நடிக்க இதனை கலைபுலி எஸ்.தாணு தயாரிக்கிறார். 

ஜல்லிக்கட்டு குறித்த திரைப்படமாக இது உருவாகவுள்ளது. தற்போது இந்த படத்தில் நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ் உதவி இயக்குனராக இணைந்துள்ளார். அரசியலிலிருந்து சமீபகாலமாக விலகியுள்ள நிலையில், முழுநேரமாக சினிமாவில் பணியாற்றத் தொடங்கி உள்ளார். 

தற்போது தான் உதவி இயக்குனராக பணியாற்றிய குறித்து பேசியுள்ளார். அதில், "கானா பாடகராக சினிமாவில் அடியெடுத்து வைத்தவன் நான். எனக்கு இவ்வளவு பெரிய அடையாளத்தையும், வாழ்க்கையையும் ஏற்படுத்தி கொடுத்தது சினிமாதான். 

தாய்மொழியான சினிமாவில் முழு நேரமும் பயணிக்க முடிவெடுத்துள்ளேன். எனவே, தான் ஆற்றல் மிகுந்த இயக்குனர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். என்னை அவருடன் இணைத்துக் கொண்டதற்கு வெற்றிமாறனுக்கு நன்றி. 

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமான வாடிவாசல் திரைப்படத்தில் பணியாற்றுவது எனக்கு பெருமையாக இருக்கிறது. ராமனுக்கு அணில் இருப்பது போல இந்த படத்தில் வெற்றிமாறனுக்கு நான் ஓர் அணிலாக இருக்க விரும்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karunas about vadivasal movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->