சிறுவயதில் எனது தந்தையால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்.. நடிகை குஷ்பூ பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையானவர் நடிகை குஷ்பு. இவர் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அதன்படி முதலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளில் பதவி வகித்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்து செயற்குழு உறுப்பினராக உள்ளார். சமீபத்தில் இவர் தேசிய பெண்களுக்கான ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ சிறுவயதில் தன்னுடைய தந்தை தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, என் தந்தை என் அம்மாவை அடித்து கொடுமை படுத்துவார். ஆணோ, பெண்ணோ ஒரு குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் அந்த குழந்தைக்கு வாழ்க்கை முழுவதும் அச்சத்துடன் காணப்படும். மேலும் மனைவியை அடிப்பது, பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை எல்லாம் சிலர் தங்களுடைய பிறப்புரிமையாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நான் என்னுடைய 8 வயதில் என் தந்தையால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அவருக்கு எதிராக பேச எனக்கு 15 வயதில் தான் தைரியம் வந்தது. ஆனால் இதையெல்லாம் சொன்னால் என் அம்மா நம்புவரா என்ற சந்தேகம் இருந்தது. ஏனென்றால் எது நடந்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம் என்ற மனநிலையில் தான் என் அம்மா இருந்தார்.

16 வயது வரை கூட எனது அப்பா எங்களுடன் இல்லை. அவர் எங்களை விட்டு சென்றுவிட்டார். அடுத்த வேலை உணவில்லாமல் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Khushboo speech about 8 years old sexual Harrasment


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->