ஹீரோவாக அறிமுகமாகும் விஜய் டிவி பாலா.. படத்தின் தயாரிப்பாளர் இவரா?.!! - Seithipunal
Seithipunal


சின்னத்திரை நடிகர் அமுதவாணன் மூலமாக விஜய் டிவிகுள் நுழைந்து பின்னர், கலக்கப்போவது யாரு சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் சின்னத்திரை நடிகர் பாலா. பின்னர் விஜய் டிவியில் கிடைக்கும் அனைத்து ஷோக்களிலும் நடித்து மக்களிடையே பிரபலமானவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் பண்ணும் டைமிங் காமெடிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியன. தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் சின்னத்திரை நடிகர் பாலா.

இவர் விஜய் சேதுபதியின் ஜூங்கா போன்ற பல்வேறு படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பாதிக்கும் பணத்தை வைத்து ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார் பாலா. இதுவரை அவர் மலைவாழ் மக்கள் வாழும் 8 கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ்களை வழங்கிஉள்ளார். சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வீட்டுக்கு ஆயிரம் என கொடுத்தார். சமூக வலைத்தளங்களில் சின்னத்திரை நடிகர் பாலாவை வாழும் கர்ணன் என்று பலரும் அழைத்தனர்.

இந்தநிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துகொண்டு வருகிறார் சின்னத்திரை நடிகர் பாலா. சமீபத்தில் நடிகராக ராகவா லாரன்ஸ் பாலாவும் சேர்ந்து தனியார் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் பாலாவை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க உள்ளேன் நல்ல கதை உள்ள இயக்குனர்கள் என்னை அணுகுமாறு கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் என்று இயக்குனர்கள் பலரும் கதை கூறிய வருவதாக தகவல்.

இந்தநிலையில், சின்னத்திரை நடிகர் பாலா நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது வீட்டில் சந்தித்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இந்தச் செய்தியை பாலா ரசிகர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சின்னத்திரையில் உள்ள பலரும் பாலாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kpy bala hero as film


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->