அதிரடி காட்டிய பத்திரப்பதிவுத் துறை - இந்த ஆண்டின் வருமானம் எவ்வளவு தெரியுமா?
register office income increase this year
அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை முக்கிய பங்காற்றுகிறது. அதாவது, பொதுமக்களின் நிலம்-மனை உள்ளிட்ட சொத்துக்களின் ஆவணங்கள் பதிவு மற்றும் நகல் பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ் ஆகியவற்றின் கட்டணங்கள் மூலம் வருமானம் கிடைத்து வருகிறது.
அதன் படி கடந்த 2023-24-ம் நிதியாண்டில் பத்திரப்பதிவுத்துறை ரூ.18 ஆயிரத்து 800 கோடி வருவாயை ஈட்டி சாதனை படைத்திருந்தது. தற்போது அந்த சாதனையை தாண்டி தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய சாதனையாக ரூ.20 ஆயிரம் கோடி வருவாயை நேற்று பிடித்துள்ளது.
இந்த மாதம் மாசி மாதம் என்பதால் பத்திரப்பதிவுகள் அதிகம் நடப்பதுடன் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 33.3 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இந்த நிதியாண்டில் இதுவரைக்கும் 32 லட்சம் பத்திரப்பதிவுகள் நடந்தாலும் வருவாய் ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது.
மார்ச் மாதம் முடிய இன்னும் குறைவான நாட்கள் இருப்பதால் பத்திரப்பதிவு எண்ணிக்கையும், வருமானமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
register office income increase this year