தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்..முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு!
Tamil Nadu budget to be presented today Expected to make major announcements
தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் நடைபெற்றது.அப்போது கவர்னர் உரையுடன் தொடங்கியஅன்றைய தினம் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து வெளியே சென்றார்.இதையடுத்து சபாநாயகர் மு.அப்பாவு கவர்னர் உரையை தமிழில் வாசித்து அவைக் குறிப்பில் ஏற்றினார்.
அதனை தொடர்ந்து 11-ந் தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது, அதன் பின் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில், 2025-26-ம் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. அப்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் என்பதால், பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட இந்த பட்ஜெட்" என்று சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்,இதனால் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் நிச்சயம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து நாளை வேளாண் பட்ஜெட் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து, 17-ந் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் நடைபெறும்.
English Summary
Tamil Nadu budget to be presented today Expected to make major announcements