விஜய் தேவரகொண்டா நடிக்கும் குஷி படத்தின் "ஆரத்யா" பாடல் வெளியீடு..! - Seithipunal
Seithipunal


விஜய் தேவரகொண்டா நடிக்கும் குஷி படத்தின் "ஆரத்யா" பாடல் வெளியீடு..!

பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் ’குஷி’.  மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

’குஷி’ திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா - சமந்தாவுடன் ஜெயராம், முரளி ஷர்மா, லக்‌ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, சரண்யா பிரதீப் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரைப்படத்தை இயக்கி உள்ளார் ஷிவா நிர்வாணா.

இந்த நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் ’ஆரத்யா’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தமிழில் சித் ஸ்ரீராம் - சின்மயி உள்ளிட்டோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலில் இளம் தம்பதியர் இடையிலான நெருக்கமும், உருக்கமும் பாடல் வரிகளிலும், காட்சிகளிலும் தெரிகிறது. 

’குஷி’ என்றதுமே விஜய் - ஜோதிகா நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்திலான திரைப்படம் தான் தமிழ் ரசிர்களின் நினைவிற்கு வரும். அந்த வெற்றித் திரைப்படத்துக்கு ஈடுகொடுக்குமா? இந்த  புதிய குஷி என்பது விரைவில் தெரிய வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kushi movie arathya song released today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->