லதா ரஜினிகாந்த் எதிரான மோசடி வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக தனியார் விளம்பர நிறுவனத்திடம் ரூ 6.2 கோடி கடன் பெற்று இருந்தார் இதற்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையொப்பமிட்டு இருந்தார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு கடன் பெற்ற பணத்தை ரஜினிகாந்த் தனியார் நிறுவனத்திற்கு தரவில்லை என தெரிவித்து தனியார் நிறுவனம் சார்பில் பெங்களூரு மாநகரம் 6வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரணை செய்த போலீசார் லதா ரஜினிகாந்த் மீது தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது, போலி ஆவணங்களை தாக்கல் செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 

இதனை தொடர்ந்து லதா ரஜினிகாந்த் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இதனை விசாரணை செய்த கர்நாடகா உயர்நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கையில் லதா மீது இந்திய தண்டனைச் சட்டம் 196, 199, 420 ஆகிய பிரிவுகள் மட்டும் ரத்து செய்ய உத்தரவிட்டது. 

மேலும் பெங்களூரு முதன்மை நீதிமன்றத்திற்கு ஆதாரங்களை திருத்தி தாக்கல் செய்த பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது. 

இந்த உத்தரவின் படி, லதா ரஜினிகாந்த் சார்பில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை செய்ய அனுமதி அளிப்பதுடன் மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து தெளிவுபடுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lata Rajinikanth against case Supreme Court order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->