27 வருடங்களுக்கு பிறகு "சில்க் ஸ்மிதா இறப்புக்கு அவர் தான் காரணம்" திகிலை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்! - Seithipunal
Seithipunal



தமிழ் சினிமாவில் என்பது மற்றும் தொண்ணூறு காலகட்டங்களில் குணச்சித்திரம் மற்றும் கவர்ச்சி நடிகையாக விளங்கியவர் சில்க் ஸ்மிதா. 1979 ஆம் ஆண்டு வெளியான வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் 1996 ஆம் ஆண்டு  தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். அவர் இறந்து 27 ஆண்டுகளாகியும்  அவரது இறப்பிற்கான மர்மம் என்னும் விலகாமலே இருக்கிறது. இந்நிலையில் சில்க்கின் மரணம் குறித்தும் அவரை பயன்படுத்திய ஹீரோக்கள் பற்றியும் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன்.

இதுகுறித்து அந்த பேட்டியில் பேசியிருக்கும் பயில்வான் சில்க் ஸ்மிதாவின் மரணத்திற்கு காரணம் அவரது டாக்டர் கணவர் தான் என தெரிவித்துள்ளார். அவர்தான் சில்க் ஸ்மிதாவை போதை ஊசி போட்டு அடிமையாக்கி வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். சில்க் டாக்டர் கணவருடைய 21 வயது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த அழைத்துச் சென்றதால் தவறாக நினைத்து கொலை செய்து விட்டார் என பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மேலும் பல கதாநாயகர்கள் மற்றும் நடிகர்கள் சில்க்கை பயன்படுத்தியதாக தெரிவித்த அவர் லிஸ்ட் மிகவும் பெரியதாக நீளும் எனவும் தெரிவித்தார். சில்க் ஸ்மிதா சினிமாவில் நடிக்க வந்ததற்கு தனது பங்கு 60% இருக்கிறது எனக் கூறிய பயில்வான் ரங்கநாதன் தான் சினிமாவிற்கு வந்ததற்கு முழு காரணமும் சில்க் ஸ்மிதா தான் என தெரிவித்திருக்கிறார் அவர் வாங்கி கொடுத்த வாய்ப்பில் தான் திரைப்படங்களில் அறிமுகமானதாகவும் தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

List of Actors Who Used Silk Smitha Who Caused His Death Actor bhailwan Ranganathan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->