திருவிழாக்களில் யானைகளை நிறுத்தி வைக்கக்கூடாது!...கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Elephants should not be kept in festivals kerala high court orders action
கேரளா மாநிலத்தில் கோவில் திருவிழாக்களின் போது யானைகள் பயன்படுத்தப்படுவது வழக்கமாக உள்ள நிலையில், அப்போது வனத்துறை அளிக்கும் வழிமுறைகள் பின்பற்றப்பட்டு திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், வனத்துறை அளிக்கும் வழிமுறைகள் சில இடங்களில் மீறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன் நம்பியார், கோபிநாத் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் படி, பாதுகாப்பு சட்டம் மற்றும் யானை பராமரிப்பு அடிப்படையில், திருவிழாவின்போது யானைகளை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட அளவிலான குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில், தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேல் யானைகளை நிறுத்தி வைக்கக்கூடாது என்றும், அவற்றிற்கு உணவு மற்றும் ஓய்வை உறுதிசெய்ய வேண்டும் என்றும், யானைகளை அழைத்து வரும் வாகனங்களின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 25 கி.மீ. கூடுதலாக இருக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கேரள உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.
English Summary
Elephants should not be kept in festivals kerala high court orders action