தனுஷுக்கு ஸ்கெட்ச்! நயன்தாராவுக்கு பின்னணியில் DyCM உதயநிதியா? பிரதான எதிர்க்கட்சியின் நிர்வாகி பகீர்! - Seithipunal
Seithipunal


தங்களது திருண ஆவணப்படத்தில், தனுஷ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான நானும் ரவுடி தான் திரைப்பட காட்சிகளை 3 நொடி  அளவு பயன்படுத்தியதற்கு ரூ.10 கோடி கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்றும், அவருக்கு சட்டப்படி பதில் அளிப்போம் என்றும் நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் தனுஷுக்கு எதிராக சாதி நடப்பது போலவும், இதன் பின்னணியில் திமுக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர், முன்னாள் நடிகர், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இருப்பது போலவும் ஒரு குற்றசாட்டை அதிமுகவை சேர்ந்த கவுரி சங்கர் என்பவர் தனது சமூகவலைத்தளம் மூலம் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த செய்திக்குறிப்பில், "நயன்தாரா வெளியிட்டது அறிக்கையா? அரசியலா? நடிகர் தனுஷ் மீது இப்படி ஒரு அறிக்கை வர என்ன காரணம்? 

நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனுக்கு திமுக ஆட்சியில் செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளுக்கான கான்டிராக்ட் கொடுக்கப்பட்டது.

நயன்தாரா தன் திருமண பத்திரிக்கையை வெகு சிலருக்கு மட்டுமே வைத்தார். அதில், மூத்தவர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் உண்டு. 

இதுபோக, வாரிசு து.மு.(உதயநிதியை குறிப்பிடுகிறார்) நடிகைக்கு நெருக்கமானவர் என்றும், நடிகையை மும்பையில் ஒரு வழக்கில் இருந்து அவர் தான் காப்பாற்றினார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.

இத்தனை பின்புலம் இருக்கும் அடிப்படையில் தான் தனுஷை மிரட்டும் வகையில் இந்த அறிக்கை வந்துள்ளதா? 

தனுஷ் ஒரு தயாரிப்பாளர். அவர் எடுத்த படத்தின் மொத்த உரிமை அவருடையது. அவரின் அனுமதி இல்லாமல் படத்தின் ஒரு நொடியை வைப்பதும் தவறு. அதற்கு அவர் சட்ட நடவடிக்கை எடுத்தது சரி.

தனது கல்யாண நிகழ்வை Netflix-க்கு விற்கும் நயன்தாரா, அதில் பாடல்களோ, படக்காட்சிகளோ பயன்படுத்துவது சட்டப்படி Commercial Use ஆகும். அதற்கான ராயல்டி மற்றும் காப்பிரைட் தொகையை அவர் வழங்கிதான் ஆக வேண்டும்!

நீதிமன்றத்தில் ஜெயிக்க முடியாது என தெரிந்ததும், தனுஷ் மீது சேற்றை வாரி இரைத்து நயன்தாரா விட்டிருப்பது அறிக்கை அல்ல- அரசியல்" என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK person say about Nayanthara Dhanush issue DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->