மாமன்னன் படத்திற்கு தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


மாமன்னன் படத்திற்கு இடைக்கால தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், படத்திற்கு தடையில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரம் ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் இராம. சரவணன் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சரும் நடிகருமான உதயநிதிக்கு எதிராக வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அவரின் அந்த மனுவில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஏஞ்சல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாவும், படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், அதுவே தனது கடைசி படம் என்று கூறி உள்ளார் என்றும் தயாரிப்பாளர் தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.

மேலும், ஒப்பந்தப்படி மீதமுள்ள 20% படப்பிடிப்பிற்கு, உதயநிதி கால்ஷீட் தராமல் புறக்கணிக்கிறார் என்றும், எனவே, மாமன்னன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று, தயாரிப்பாளர் தனது மனுவில் தெரிவித்து இருந்தார். 

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், மாமன்னன் படத்திற்கு தடையில்லை என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த தடை வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த வழக்கின் பிரதான மனு மீதான விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டு உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaaMannan Movie Ban case Chennai HC new order 23


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->