நடிகர் மாதவனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.! வாயைப்பிளக்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் ரசிகர்களால் சாக்லேட் பாய் என செல்லமாக அழைக்கப்படுகின்ற மாதவன் தனது கவர்ச்சிகர புன்னகையால் நிறைய பெண்களை கவர்ந்திருக்கிறார். சீரியல்கள் மூலமாக தனது திரைப் பயணத்தை துவங்கி விளம்பர படங்களில் நடித்து பின்னர் வெள்ளித்திரையில் ஹீரோவாக கால் பதித்தார்.

கடந்த 2000 ஆண்டு மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே படத்தில் மாதவனின் ரொமான்ஸ் காட்சிகளுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்னர் கௌதம் மேனனின் மின்னலே படத்தில் மாதவன் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு காலகட்டத்தில் திரைத்துறையில் காதல் மன்னனாக இருந்த மாதவனுக்கு தற்போதும் பெண்கள் ரசிகர் கூட்டம் இருக்கிறது. 50 வயதை கடந்த பின்னரும் மாதவன் மீது பெண்களுக்கு அந்த கிரஷ் குறையவே இல்லை.

இந்நிலையில் சமீப சில நாட்களாக திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வரும் நிலையில், நடிகர் மாதவனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு 90 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhavan total assets value


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->