விக்கிரவாண்டி மாணவி மர்ம மரணம்! ரத்தக்கறை படிந்த ரிப்பன்! மறைக்க துடிக்கும் காவல்துறை! பெற்றோர் அதிர்ச்சி பேட்டி!
Vikravandi school girl mystery death
விக்ரவாண்டி அருகே தனியார் பள்ளியில் நான்கு வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், சிறுமையின் பெற்றோர் பரபரப்பு பேட்டி ஒன்றை இன்று பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ளனர்.
சிறுமையின் பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் கூட்டாக கொடுத்த அந்த பேட்டியில், விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளர் இந்த விவகாரங்களில் பல விஷயங்களை மறைப்பதாகவும், மாணவியின் ரத்தக்கரை படிந்த துணியை காவல் ஆய்வாளர் கேட்டதாகவும், அதற்கு நாங்கள் நீதிமன்றத்தில் அதனை ஒப்படைத்துக் கொள்கிறோம் என்று தெரிவித்திருந்த போதும், மாணவியின் வீட்டிற்க்கே வந்து ஒரு மணி நேரம் காத்திருந்து அந்த ரத்தக்கரை படிந்த துணியை போலீசார் பெற்று சென்று உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் பள்ளியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, காவல் ஆய்வாளர் அதனை பார்க்க விடாமல் தடுக்க பலமுறை முயற்சி செய்ததாகவும், அந்த சிசிடிவி காட்சிகளை தங்களுக்கு தர காவல் ஆய்வாளர் மறுத்ததாகவும், ஆனால் அந்த சிசிடிவி கட்சியில் உள்ள காட்சிகளை தங்களுடைய செல்போன் கேமரா மூலம் ஆதாரமாக எடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.
மேலும் அந்த சிசிடிவி காட்சிகளில் சுமார் இரண்டு மதியம் 2 மணி 14 நிமிடங்களில் இறந்த குழந்தையை செப்டிக் டேங்க் அருகே ஒருவர் எடுத்து வருவதும், பின்னர் அடுத்த சில நிமிடங்களில் அவர் அந்த குழந்தையை அங்கிருந்து எடுத்துச் செல்வதும் பதிவாகியுள்ளதாகவும், ஆனால் பள்ளித் தரப்பிலிருந்து சுமார் 2 மணி 30 நிமிடங்களுக்குத்தான் மாணவியை தேடுவது போலவும், செப்பிட்டங் அருகே அவர்கள் வருவது போலவும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
மாணவியை முன்னேம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது, மாணவியின் தலை முடியில் கூட ஈரம் இல்லை. அவர் அணிந்திருந்த உடையில் செப்டிக் டேங்கில் விழுந்தற்கு உண்டான எந்த துர்நாற்றமும் அடிக்கவில்லை, ப்ளீச்சிங் பவுடர் நாற்றம் மட்டுமே அடித்தது என்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தங்களது மகளுடன் படித்த சக மாணவி ஒருவர், தங்களது மகளை ஆசிரியர் ஒருவர் அடித்ததாகவும், பின்னர் செப்டிக் டேங்கில் கொண்டு அவரை போட்டதாகவும் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி காட்சி ஆதாரங்களை மீண்டும் ஆராய்ந்து, தங்களது மகளுக்கு என்ன நடந்தது? அவர் எப்படி இறந்தார் என்ற விவரங்கள் எங்களுக்கு தெரிய வேண்டும். இதுபோல் இன்னொரு மாணவிக்கு நிகழக் கூடாது, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்றும் மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
English Summary
Vikravandi school girl mystery death