அண்ணா பல்கலை, வழக்கில் திருப்பம்: உத்தரவை ரத்து செய்யுங்கள் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா பல்கலை க்கழக வளாகத்தின் மையப் பகுதியில் வைத்து மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கில் திமுக ஆதரவாளர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே இந்த வழக்கை தாமே முன்வந்து விசாரணை கெடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து வழக்கை விசாரணை செய்ய உத்தரவிட்டது. 

மேலும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பேட்டி கொடுத்ததற்கும், அவர் கூறிய கருத்துகளுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில் என்ஐசி-யின் தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்றும், அதற்கு தமிழக அரசு காரணம் இல்லை என்றும் தமிழக அரசின் அந்த மேல்முறையீட்டும் அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை, மாணவிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆகிய பிற  உத்தரவுகளை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AU Case DMK Govt SC


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->