மாமன்னன் திரைபடத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? - படக்குழு அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மாமன்னன் திரைபடத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? - படக்குழு அதிரடி அறிவிப்பு.!

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன் பின்னர் அவர் தனுஷூடன் இணைந்து கர்ணன் படத்தை இயக்கினார்.

இந்த இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றியை பெற்றது. இந்த நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மாமன்னன் திரைபடத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவா ஜூன் 1 ஆம் தேதி (நாளை) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த இசைவெளியீட்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியானதில், ராசா கண்ணு என்ற பாடலை வைகைப்புயல் வடிவேலு பாடியுள்ளார். இந்த பாடலில் இடம் பெற்றுள்ள வரிகளும், வடிவேலுவின் குரலும் ரஹ்மானின் இசையும் மக்கள் மனதை வென்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamannan movie audio launch date annaounce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->