நடிகை மஞ்சு வாரியரின் இடத்தைப் பிடித்த ஐஸ்வர்யா ராய்.?! அவரே வெளியிட்ட தகவல்.!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை மஞ்சு வாரியார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஆயிஷா. மலையாள திரைப்படமான இந்த ஆயிஷா கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது. இதன் ப்ரோமோ நிகழ்ச்சியில் பேசிய மஞ்சு வாரியர், "அசுரன் திரைப்படத்திற்கு முன் எனக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தது.

ஆனால், நான் மலையாள சினிமாவில் மிகவும் பிசியாக இருந்ததால் என்னால் தமிழ் சினிமாவுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனது. அத்துடன் சில பிரச்சினைகளின் காரணமாக அப்பொழுது தமிழில் நடிக்க முடியவில்லை.

அஜித் நடிப்பில் உருவாகிய கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில் நான்தான் நடிக்க வேண்டியது. ஆனால், கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக அதில் என்னால் முடிக்க முடியாமல் போனது. எனவே அந்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்." என்று கூறியுள்ளார். 

ராஜீவ் மேனன் இயக்கிய, 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படத்தில் அஜித், மம்மூட்டி, நடிகைகள் தபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manju warrior missed Kandu konden kandu Konden Movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->