கருப்பர் கூட்டத்தை கழுவி ஊத்திய மனோபாலா.. பகிரங்க எச்சரிக்கை.. பரபரப்பு வீடியோ.!!
Manobala angry about Karuppar Koottam video
தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியம், கடவுள் நம்பிக்கை போன்ற விஷயங்களை கொச்சைப்படுத்தவே பல கும்பல்கள் சுற்றிக்கொண்டு வருகிறது. இதில் தங்களை பெரியார் தத்துவ வாதிகளாக அறிமுகம் செய்துகொண்ட கும்பல்கள் இந்துத்துவ கொள்கை மற்றும் பண்பாடுகளை தரம்தாழ்த்தி விமர்சிப்பதை வழக்கமாக வைக்கிறது.
விமர்சனம் என்ற பெயரில் அவதூறான வார்த்தைகளை அப்பட்டமாக உபயோகம் செய்து தொடர்ந்து வீடியோ பதிவு செய்து வந்த நிலையில், பொறுத்து பொறுத்து பார்த்த மக்கள் கந்த சஷ்டி கவச விவகாரத்தில் தங்களின் எதிர்ப்பை உச்சபட்சமாக வெளிப்படுத்த துவங்கினர்.
பலதரப்பில் இருந்து போலி புரட்சி கோஷ்டிக்கு கண்டனம் வெளியாகி வரும் நிலையில், நடிகர் மற்றும் தயாரிப்பாளர், இயக்குனர் மனோபாலா கொந்தளித்துள்ளார். இது குறித்த காணொளி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
இது குறித்த காணொளியில், " நான் மனோபாலா பேசுகிறேன். நான் இது குறித்த வீடியோ பதிவிட வேண்டாம் என்று நினைத்தேன். ஏன் என்றால் அது நாமே அவனை வளர்ந்துவிடும் நிகழ்வாகும். இருந்தாலும் இந்த சமயத்தில் கட்டாயம் பேசியாக வேண்டும். இந்து கொள்கையில் உனக்கு அவ்வுளவு இழக்காரமா?..
நீ கிருத்துவர் மற்றும் முஸ்லீம்களை குறித்து ஒருவார்த்தை பேசினால் என்ன ஆகும்?.. உன் உயிரே கூட போகலாம்.. இந்துத்துவ கொள்கைகளில் பல நன்மையான கருத்துக்கள் இருக்கிறது. இந்து மக்களின் கொள்கையில் தலையிட நீ யார்?.. உன் இஷ்டத்திற்கு எதையாவது சொல்ல வேண்டியது தானா?..
அவ்வுளவு வீரமாக பேசிய நீ ஏன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறாய்?.. பயம் தானே.. அதுதான் எங்களது கடவுள்.. முஸ்லீம் மதத்தை சார்ந்த நடிகர் ராஜ்கிரண் இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். கிருத்துவர்களும், முஸ்லீம்களும் கூட உனக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனது இணைய பக்கத்தில் கூட இதனை நான் பதிவு செய்யவில்லை. எனது நண்பரின் இணையப்பக்கம் மூலமாக இதனை வெளியிடுகிறேன். எனது பக்கத்தில் வெளியிட்டால் இதனை வைத்த நான் பிரபலமானது போல இருக்கும். இதேபோல பல விடியோவை எனது நண்பரின் பக்கம் மூலமாக தொடர்ந்து பதிவு செய்வேன். தயவு செய்து வெளியே தலையை கட்டிவிடாதே.. இங்கு பின்னால் பல உண்மையான கூட்டம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Manobala angry about Karuppar Koottam video